
போர்ப்ஸ் நிறுவனம் வெளியிட்டுள்ள 2018ம் ஆண்டிற்கான இந்திய பணக்காரர்கள் பட்டியலின் டாப் 5 பட்டியலில், முதன்முறையாக பாலிவுட் நடிகை தீபிகா படுகோனே இடம் பிடித்துள்ளார்.
இந்த பட்டியலில் நடிகர் சல்மான் கான் தொடர்ந்து 3வது முறையாக இடம் பிடித்து உள்ளார். இவரது வருமானம் ரூ.252.25 கோடி. கிரிக்கெட் வீரர் விராத் கோஹ்லி 2வது இடம் பிடித்துள்ளார். இவரது வருமானம் ரூ.228.09 கோடி. அக்ஷய் குமார் ரூ.185 கோடி வருமானத்துடன் 3வது இடத்தில் உள்ளார்.
ரூ.112.8 கோடி வருமானத்துடன் தீபிகா படுகோனே 4வது இடத்திலும், தோனி ரூ.101.77 கோடி வருமானத்துடன் 5 வது இடத்திலும் உள்ளார்.
2017ல் 21 பெண்கள் இடம்பெற்றிருந்த நிலையில், 2018ல் இது 18 ஆக குறைந்துள்ளது. இருந்த போதிலும் டாப் 5 பட்டியலில் தீபிகா இடம் பிடித்துள்ளார். இதன்மூலம் போப்ஸ் டாப் 5 இந்திய பணக்காரர்கள் பட்டியலில் இடம்பிடித்த முதல் பெண் என்ற பெருமையை தீபிகா பெற்றுள்ளார்.
Post a Comment