Ads (728x90)

ஷங்கர் இயக்கத்தில் வெளிவந்த 2.0 படத்தின் மூலம் ஹிந்தி நடிகரான அக்ஷய் குமார் அறிமுகமாகி உள்ளார். இந்தப் படத்தில் பறவைகளைக் காக்க வேண்டும் என நினைக்கும் அவர்தான் கதாநாயகன். அந்த கதாநாயகனை அழிக்கத் துடிக்கும் சிட்டி 2.0 வாக நடித்திருக்கும் ரஜினிதான் படத்தின் வில்லன். இதுதான் படத்தின் கதைப்படியான உண்மையான விஷயம்.

அக்ஷய்குமார் ஹிந்தியில் நடித்து இதுவரை வெளிவந்துள்ள படங்களில் 9 படங்கள் 100 கோடி வசூலைத் தாண்டியுள்ளன. இப்போது அந்த வரிசையில் 10வது படமாக 2.0 படமும் இணைந்திருக்கிறது. படம் வெளியான 5 நாட்களில், ஒரு வாரம் முடிவதற்கு முன்னதாகவே 100 கோடியை வசூலித்த படமாக அக்ஷய்குமாருக்கு 2.0 ஒரு பெருமையைத் தேடித் தந்துள்ளது.

அக்ஷய்குமார் நடித்து இதற்கு முன் வெளிவந்த “ஹவுஸ்புல் 2, ரவுடி ரதோர், ஹாலிடே, ஏர்லிப்ட், ஹவுஸ்வுல் 3, ரஸ்தம், ஜாலி எல்எல் பி 2, டாய்லெட் ஏக் பிரேம் கதா, கோல்டு” ஆகிய படங்கள் ஒரு வாரத்திற்குப் பின்னர்தான் 100 கோடி கிளப்பில் இணைந்துள்ளன. அந்த சாதனையை 2.0 முறியடித்துள்ளது.

2.0 கமர்ஷியல் ரீதியில் எப்படி வசூலித்தாலும் அக்ஷய்குமாரின் நடிப்பைப் பாராட்டும் ஒரு படமாக அமைந்துள்ளதே அவருக்கு சிறப்புதான்.

Post a Comment

Recent News

Recent Posts Widget