Ads (728x90)

இரண்டாயிரத்து 778 மில்லியன் ரூபாய்க்கும் அதிக பெறுமதியுடைய 231 கிலோ 54 கிராம் ஹெரோயினுடன் இரண்டு சந்தேகநபர்கள் காவற்துறை போதைப்பொருள் ஒழிப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

பலபிட்டி மற்றும் பேருவளைக்கு இடையில் கடற்பகுதியில் நேற்று இரவு மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் இந்த ஹெரோயின் தொகையுடன் சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டனர்.

கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் பேருவளை பிரதேசங்களை சேர்ந்த நபர்கள் என காவற்துறை ஊடக பேச்சாளர் குறிப்பிட்டார்.

இந்த ஹெரோயின் தொகை இலங்கையில் கண்டுபிடிக்கப்பட்ட இரண்டாவது பாரிய ஹெரோயின் தொகையாகும் என காவற்துறை ஊடக பேச்சாளர் , காவற்துறை அத்தியட்சகர்  ருவன் குணசேகர மேலும் தெரிவித்தார்.

காவற்துறை போதைப்பொருள் ஒழிப்பு பிரிவு சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகிறது.

Post a Comment

Recent News

Recent Posts Widget