Ads (728x90)

எமது பலத்தை எதிர்கொள்ள முடியாத ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான ஐக்கிய தேசியக் கட்சியினர் நீதிமன்றங்களில் எமக்கு எதிராக வழக்குகளைத் தொடுத்து சண்டித்தனம் காட்டுவதாக மஹிந்த அணியினர் சூளுரைத்துள்ளனர்.

இந்தத் தகவலை மஹிந்த அணியின் நாடாளுமன்ற உறுப்பினர் தினேஷ் குணவர்த்தன சிங்கள தொலைக்காட்சி ஒன்றுக்குத் தெரிவித்துள்ளார்.

உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பு எமக்குச் சாதகமாக அமைந்தால் நாடாளுமன்றத் தேர்தலை எதிர்கொண்டு நாம் மீண்டும் ஆட்சியமைப்போம்.
தீர்ப்பு எமக்குப் பாதகமாக அமைந்தால் பெரும்பான்மைப் பலத்தை நாடாளுமன்றத்தில் நிரூபித்துக் காட்டிவிட்டு ஆட்சியமைப்போம்.

உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்பார்த்துக் காத்திருக்கின்றோம். அதுவரைக்கும் நாம் நாடாளுமன்ற அமர்வுகளில் பங்கேற்கமாட்டோம் என தினேஷ் குணவர்த்தன மேலும் தெரிவித்துள்ளார்.

Post a Comment

Recent News

Recent Posts Widget