
நாம் ஐ.தே.கவுடன் எவ்வித ஒப்பந்தங்களையும் செய்யவில்லை என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார்.
வார இறுதி தமிழ் பத்திரிகை ஒன்றிற்கு அவர் வழங்கிய விசேட செவ்வியிலேயே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
ஜனநாயகத்தினை பாதுகாப்பதற்காகவும், ஒக்டோபர் 26ஆம் திகதிக்கு முன்பிருந்த அரசியல் சூழலை நாட்டில் மீளவும் ஏற்படுத்தவும் ஐக்கிய தேசிய முன்னணி ஆட்சியமைப்பதற்கு தாங்கள் ஆதரவளிப்பதாக கூறினாலும், ஐ.தே.கவுடன் இரகசிய ஒப்பந்தங்கள் செய்யப்பட்டுள்ளதாக என கேட்கப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கும்போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
நாங்கள் ஐ.தே.கவுடன் எவ்வித ஒப்பந்தங்களையும் செய்யவில்லை, அவ்வாறான எந்த தேவைகளும் எமக்கில்லை. நாம் அனைவருடனும் பேசுகின்றோம். மகிந்த ராஜபக்சவுடன் பேசுகின்றோம். அவருடைய புதல்வர்கள் எனது வீட்டுக்கு வந்து பேச்சுக்களை நடத்தினார்கள்,
இவற்றையெல்லாம் நான் பகிரங்கப்படுத்தி குழப்பங்களை ஏற்படுத்த வேண்டிய அவசியம் எமக்கு இல்லை என குறிப்பிட்டுள்ளார்.
Post a Comment