Ads (728x90)

முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ச ஜனாதிபதியாக செயற்பட்ட காலப்பகுதியில் வைத்திருந்த தனது மந்திர கோலை மீண்டும் கையில் எடுத்துள்ளார் என தகவல் வெளியாகியுள்ளது.
அந்தக் காலப்பகுதியில் மந்திர கோல் மிகவும் பிரபலமான ஒன்றாக பேசப்பட்டது.
இந்நிலையில் மீண்டும் பிரதமராக மஹிந்த நியமிக்கப்பட்டதன் பின்னர் அவர் தனது மந்திர கோலை மீண்டும் பயன்படுத்த ஆரம்பித்துள்ளார். இது பயன்படுத்திய போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகியுள்ளன.
கேளராவிலுள்ள மந்திரவாதிகளால் இந்த மந்திர கோல் விசேடமாக தயாரிக்கப்பட்டு மஹிந்தவுக்கு கொடுக்கப்பட்டுள்ளதாக அந்த காலப்பகுதியில் கூறப்பட்டது.
எந்தவொரு காரியத்தையும் வெற்றி பெறச் செய்வதே இதன் நோக்கம் என முன்னர் தகவல்கள் வெளியாகி இருந்தமை குறிப்பிடத்தக்கது.

Post a Comment

Recent News

Recent Posts Widget