Ads (728x90)


தமிழில் எத்தனை ஹீரோக்கள் இருந்தாலும் ரசிகர்கள் வரவேற்பிலும், வசூலிலும் விஜய் தான் முன்னணியில் இருக்கிறார் என்பது மீண்டும் நிருபணமாகியுள்ளது. 2018-ம் ஆண்டு டுவிட்டரில் அதிகம் பேசப்பட்ட 10 பிரபலங்களின் பட்டியலை டுவிட்டர் இந்தியா வெளியிட்டுள்ளது.

இதில் இடம்பெற்றுள்ள ஒரே தமிழ்நடிகர் விஜய்தான். அகில இந்திய அளவில் தேர்வு செய்யப்பட்ட 10 பேர் கொண்ட பட்டியலில் விஜய்க்கு 8-ம் இடம் கிடைத்துள்ளது.

இந்தப் பட்டியலில் பிரதமர் மோடி முதலிடத்திலும், இரண்டாம் இடத்தில் ராகுலும் உள்ளனர். தெலுங்கு நடிகர் பவன் கல்யாண் 6 ஆவது இடத்திலும், 7 ஆவது இடத்தில் ஷாருக் கானும், 8ஆவது இடத்தில் விஜய்யும் உள்ளனர்.

ரஜினி உட்பட வேறு எந்த கோலிவுட் பிரபலங்களுக்கும் இந்த கவுரவம் கிடைக்கவில்லை.

Post a Comment

Recent News

Recent Posts Widget