ஜனாதிபதி தேர்தலை நடத்துவதற்கு முன்னர் மாகாண சபை தேர்தலை நடத்துவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
கொழும்பில் நேற்று இடம்பெற்ற நிகழ்வொன்றின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும்போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
எதிர்வரும் தேர்தலை வெற்றிகொள்வதற்காக சலுகைகளை வழங்கி மக்களை கவர்வதற்கு அரசாங்கம் முயற்சிக்கும்.
அடுத்துவரும் பாதீட்டில் இந்த முயற்சி முன்னெடுக்கப்படும். எவ்வாறெனினும், அவர்களது எதிர்ப்பார்ப்பு நிறைவேறப்போவதில்லையென மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
இதேவேளை, மஹிந்த ராஜபக்ஷவிற்கும் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவிற்கும் இடையிலுள்ள ஒற்றுமையை சிதைக்க முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க செயற்பட்டுவருவதாக நாடாளுமன்ற உறுப்பினர் அநுராத ஜெயரத்ன கண்டியில் நேற்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் குற்றம் சுமத்தியுள்ளார்.
Post a Comment