Ads (728x90)

இவ்வருடத்தில் உயர் தர வகுப்பில் பிரவேசிக்கும் மாணவர்களுக்கும் உயர் தர வகுப்புக்கு கற்பிக்கும் ஆசிரியர்களுக்கும் மடிக்கணனிகளை வழங்குவதற்கு கல்வி அமைச்சு தீர்மானித்துள்ளது.

இது தொடர்பான பிரேரணை முன்வைக்கப்படவுள்ள வரவு செலவுத் திட்டத்திலும் உள்வாங்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சர் அகில விராஜ்காரியவசம் தெரிவித்துள்ளார்.

கடந்த 2016 ஆம் ஆண்டு இந்த திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டிருந்த போதிலும், நடைமுறைப்படுத்த முடியாமல் போனது. இதனால், குறித்த நிதி மீண்டும் திரைசேறிக்கு திருப்பி அனுப்பப்பட்டுள்ளது. இதனை இவ்வருடத்தில் செயற்படுத்த எதிர்பார்த்துள்ளதாகவும் அமைச்சர் கூறியுள்ளார்.

உயர் தரத்தில் கல்வி கற்கும் மாணவர்களும், ஆசிரியர்களும் சுமார் 2 லட்சம் பேர் உள்ளனர். இவர்கள் அனைவருக்கும் டெப் கணனிகளைப் பெற்றுக் கொடுப்பது தனது இலக்கு எனவும் அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.

Post a Comment

Recent News

Recent Posts Widget