Ads (728x90)

நாட்டில் கடந்த காலத்தில் ஏற்பட்ட பல்வேறு பதற்றமான அரசியல் நிகழ்வுகளுக்குப் பொறுப்பான ஜனாதிபதியிடம் ஜனாதிபதித் தேர்தல் ஒன்றை நடாத்துமாறு கோருவதே அஸ்கிரிய பீட போஷகருக்கு பொருத்தமானது என பிரதி அமைச்சர் நலின் பண்டார தெரிவித்துள்ளார்.

எமக்குக் கிடைத்துள்ள தகவல்களின்படி எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் மைத்திரிபால சிறிசேன போட்டியிடுவதற்கு எதிர்பார்த்துள்ளார். இதனால், இந்த வேண்டுகோளை அவரிடம் விடுப்பதே உசிதமானது.

ஜனவரி 8 ஆம் திகதியின் பின்னர் ஜனாதிபதித் தேர்தல் ஒன்றுக்குச் செல்வதற்கான வாய்ப்பு ஜனாதிபதிக்குள்ளது எனவும் பிரதி அமைச்சர் மேலும் கூறியுள்ளார்.

அரசியலமைப்பு மாற்றத்தை விட்டு விட்டு அரசாங்கம் தேர்தல் ஒன்றுக்கு செல்வதே பொருத்தமானது என அஸ்கிரிய பீட போஷகர் ஆனமடுவே தம்மதஸ்ஸி தேரர் தன்னிடம் தெரிவித்ததாக பொதுஜன பெரமுனவின் தலைவர் பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ் நேற்று தெரிவித்திருந்தார்.

இது குறித்து வினவியபோதே பிரதி அமைச்சர் நளின் பண்டார இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

Post a Comment

Recent News

Recent Posts Widget