Ads (728x90)

இராஜதந்திர நடவடிக்கைகளை பயன்மிக்கதாகவும் வினைத்திறனுடனும் முன்னெடுக்குமாறு வெளிநாட்டிலுள்ள இலங்கை தூதுவர்களுக்கு வெளிவிவகார அமைச்சர் திலக் மாறப்பன வேண்டுகோள் விடுத்துள்ளார்.

விசேட அறிவித்தல் ஒன்றின் மூலம் இந்த வேண்டுகோளை அவர் விடுத்துள்ளார்.

பௌத்த மதம், மாணிக்கக்கல், தேயிலை மற்றும் வாசனைத் திரவியங்கள் என்பவற்றுக்கு புகழ்பெற்ற இடம் இலங்கை என்பதை உலகிற்கு அறிமுகம் செய்யுமாறும் அவர் தூதுவர்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இலங்கையை அறிமுகம் செய்வதற்கு தங்களுக்கு முடியுமான அத்தனை வழிகளையும் பயன்படுத்துமாறும் அவர் கேட்டுள்ளார்.

இந்த நடவடிக்கைகளின் போது இராஜதந்திரம் மற்றும் தகவல் ஊடகத்துறை என்பன தொடர்பான திறன் மிகவும் பிரதானமானது எனவும் அமைச்சர் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.

Post a Comment

Recent News

Recent Posts Widget