Ads (728x90)

அமெரிக்க வெள்ளை மாளிகையை தகர்க்க திட்டமிட்டதாக வாலிபர் ஒருவரை போலீசார் கைது செய்து உள்ளனர்.

கைதான இளைஞர் 21 வயதான ஹஷர் ஜலால் தஹெப் எனவும் அவரிடம் இருந்து கைகளால் வரையப்பட்ட தரை தள வரைபடம் ஒன்றும் கைப்பற்றப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

மேலும் வாஷிங்டனில் உள்ள அரசு அலுவலகங்கள் பலவற்றிற்கும் அவர் குறிவைத்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. அமெரிக்காவின் ஜார்ஜியா மாகாணத்தை சேர்ந்த தஹெப் என்ற இளைஞர் வின்னெட் கவுண்டி பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.

Post a Comment

Recent News

Recent Posts Widget