தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வரும் விஜய் அவரது மகனை வேட்டைக்காரன் படத்தில் அறிமுகப்படுத்தினார். அந்தப் படத்தில் ‘நான் அடிச்சா தாங்க மாட்ட’ என்ற பாடலுக்கு விஜய்யுடன் சேர்ந்து நடனமாடிய சஞ்சய் அதன் பிறகு படங்களில் நடிக்கவில்லை.கடந்த ஆண்டு தனது பள்ளிப்படிப்பை முடித்த சஞ்சய் தனது அப்பாவைப் போலவே சினிமா துறையை தேர்வு செய்து ஃபிலிம் மேக்கிங் தொடர்பாக படித்து வருகிறார். தற்போது விஜயின் மகனான சஞ்சய் ஒரு குறும்படத்தில் நடித்துள்ளார். ஜங்ஷன் என்று பெயரிடப்பட்டுள்ள இந்தக் குறும்படத்தில் தன்னை ராகிங் செய்யும் ரோஹித் என்பவரை தாக்க முடிவு செய்து செல்கிறார் ஜேசன் சஞ்சய்.
ரோஹித்திற்காக ஒரு இடத்தில் காத்திருக்கிறார். கையில் கிரிக்கெட் மட்டையுடன் வரும் ரோஹித் மீது அந்த வழியாக வந்த கார் மோதவே ஜேசன் அதிர்ச்சி அடைகிறார்.
காரை ஓட்டி வந்த வாலிபர் காரிலிரிருந்து இறங்கி ரோஹித்தின் கிரிக்கெட் மட்டையையும் , ஜேசனையும் மாறி மாறிப் பார்க்கிறார்.
அந்த நபர் அங்கிருந்து கிளம்பிய பிறகு ஜேசன் சஞ்சய் ரோட்டில் கிடக்கும் ரோஹித்தை அதிர்ச்சியில் பார்க்கிறார். இதனிடையே சம்பவ இடத்துக்கு வந்த ஜேசன் சஞ்சயின் நண்பர்கள் இருவர் அவரை வீட்டுக்க் அழைத்துச் சென்று விடுகின்றனர். ஜேசன் சஞ்சய் வெளிப்படுத்திய நடிப்பில் அவரது தந்தை விஜய்யின் நடிப்பை காண முடிகிறது.
இந்தக் குறும்படத்தில் தோன்றிய கதாபாத்திரங்கள் அனைத்துமே தமிழை விட ஆங்கிலத்திலேயே அதிகம் உரையாடுகின்றனர். அனைவரும் சகலமாக பேசுகின்றனர். இந்த குறும்படத்தை விஜய் ரசிகர்கள் பலரும் சமூக வலைதளங்களில் பகிர்ந்து வருகின்றனர்.
Post a Comment