Ads (728x90)

நயன்தாரா 2 காதல்களில் தோல்வியடைந்து 3-வதாக டைரக்டர் விக்னேஷ் சிவனுடன் நெருக்கமானார். நானும் ரவுடிதான் படத்தின் படபிடிப்பில் இருந்து இந்த காதல் தொடர்கிறது. இருவரும் ஜோடியாக சுற்றுகிறார்கள். வெளிநாடுகளில் நெருக்கமாக நின்று படம் எடுத்து அவற்றை சமூக வலைத்தளத்திலும் போடுகிறார்கள்.

நயன்தாராவும், விக்னேஷ் சிவனும் ரகசிய திருமணம் செய்துகொண்டார்கள் என்றும், திருமணம் செய்து கொள்ளாமலேயே சேர்ந்து வாழ்கிறார்கள் என்றும் இருவேறு தகவல்கள் பரவுகின்றன. சென்னையில் புதிதாக வாங்கியுள்ள வீட்டில் இருவரும் ஒன்றாக வசிக்கின்றனர் என்றும் கூறப்படுகிறது. இந்த கிசுகிசுக்களுக்கெல்லாம் விளக்கம் சொல்லாமல் காதலை தொடர்கிறார்கள்.

நயன்தாராவை விரைவில் திருமணம் செய்துகொள்ளும்படி அவரது ரசிகர்கள் விக்னேஷ் சிவனை வற்புறுத்தி கருத்துக்கள் பதிவிட்டு வருகிறார்கள். இந்த நிலையில் புத்தாண்டை கொண்டாட இருவரும் அமெரிக்கா சென்றுள்ளனர். அங்கு இருவரும் ஜோடியாக எடுத்த படங்களை சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ளனர்.

படங்களை பார்த்த ரசிகர்கள் இந்த ஆண்டாவது இருவரும் திருமணம் செய்துகொள்ளுங்கள் என்று கூறி வருகிறார்கள். அஜித்குமார் ஜோடியாக நயன்தாரா நடித்துள்ள விஸ்வாசம் படம் பொங்கலுக்கு வெளியாகிறது. தொடர்ந்து இரு வேடங்களில் நடித்துள்ள ‘ஐரா’ மற்றும் ‘கொலையுதிர்காலம்’ ஆகிய படங்களும் திரைக்கு வருகின்றன. சிரஞ்சீவி ஜோடியாக நடித்துள்ள சைரா நரசிம்ம ரெட்டி படவேலைகளும் இறுதி கட்டத்தில் உள்ளது.

Post a Comment

Recent News

Recent Posts Widget