முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரத்துங்க, ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியைக் காட்டிக்கொடுத்துவிட்டு, ஐக்கியத் தேசியக் கட்சி அரசாங்கத்தை மீண்டும் அமைக்க, அக்கட்சியில் இணையமாட்டாரெனத் தான் நம்புவதாக, சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார்.இது குறித்து மேலும் தெரிவித்த அவர்: எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஷவுடன், ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி இணைந்து செயற்படுவதற்கு எதிர்ப்பை வெளியிடும் முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா, மீண்டும் ஐ.தே.கவுடன், ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி இணைந்து செயற்படுவதையே விரும்புகிறார் எனவும் தெரிவித்தார்.
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, பொதுமக்களால் நிராகரிக்கப்பட்டவர் எனக் கூறமுடியாதென்று கூறிய தயாசிறி, ஜனாதிபதித் தேர்தலில் மஹிந்த தோற்றிருந்தாலும், கடந்த வருடம் நடைபெற்ற உள்ளூராட்சிமன்றத் தேர்தலில், ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன, பாரிய வெற்றியைப் பெற்றிருந்தது என்றும் எனவே, அரசியலில் தோல்வி வெற்றி என்பது சாதாரணமானது எனவும் தெரிவித்தார்.
Post a Comment