Ads (728x90)

ஒருமித்த நாடு என்ற வார்த்தைக்கான சரியான விளக்கத்தினை குறித்த வரைவினை படித்துப்பார்த்தாலே புரியும் என, தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

மேலும், அதனை படித்துப் பார்க்காது, ரணில் மற்றும் ராஜபக்ஷ என்ன சொல்லுகிறார்கள் என பத்திரிகைகள் எழுதிக் கொண்டிருப்பதாகவும் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன் குற்றம் சுமத்தியுள்ளார்.

பாராளுமன்ற உறுப்பினரான எம்.ஏ. சுமந்திரனுக்கு ´தமிழினத்தின் காவலனே வருக வருக´ என பருத்தித்துறையில் வடமராட்சி பொது அமைப்புக்களின் ஏற்பாட்டில் நேற்று (16.01) வரவேற்பு நிகழ்வு ஒன்று இடம்பெற்றது.

இந்நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே எம்.ஏ. சுமந்திரன் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

Post a Comment

Recent News

Recent Posts Widget