இளையராஜாவின் 75வது பிறந்த நாளை கொண்டாடி கவுரவிக்கும் விதமாக, அவரை வைத்து 'இளையராஜா 75' என்ற பிரம்மாண்ட இசை மற்றும் கலை நிகழ்ச்சிகளை நடத்த தமிழக திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கம் ஏற்கனவே அறிவித்துள்ளது.வரும் பிப்., 2 மற்றும் 3 தேதிகளில் சென்னை, நந்தனம், ஒ.டபிள்யு,சி.ஏ., மைதானத்தில் நடக்கவிருக்கும் இந்த பிரம்மாண்ட விழாவின் ஒரு பகுதியாக, இளையராஜாவின் இசை நிகழ்ச்சியும் நடக்கவிருக்கிறது. இதனால், இந்த நிகழ்ச்சிக்கு ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டிருக்கிறது.
சமீப காலமாக டிசர் வெளியிட்டு, எப்படியெல்லாம் திரைப்படங்களுக்கு விளம்பரம் தேடுகின்றனரோ, அதேபோல, இந்த நிகழ்ச்சிக்கும் டீசர் வெளியிட்டிருக்கிறது. இந்த நிகழ்ச்சிக்காக தயாரிக்கப்பட்ட டீசரை விஷால், விஜய் சேதுபதி, கார்த்தி, ஜெயம் ரவி, ஆர்யா, விஷ்ணு விஷால், ஜீவா, அதர்வா, சந்தானம் மற்றும் நந்தா உள்ளிட்ட பத்து நடிகர்கள் ஒரே நேரத்தில் தங்கள் டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டு, அது குறித்து பதிவிட்டுள்ளனர். இவர்கள் அனைவரும், அந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ளப் போவதாகவும் தெரிவித்துள்ளனர்.
Post a Comment