Ads (728x90)

நாட்டில் ஜனாதிபதித் தேர்தலுக்கு முன்னர் மாகாண சபைத் தேர்தலே இடம்பெறும் என  ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி அமைப்பாளர்களிடம் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அறிவித்துள்ளார்.
ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சி ஊவா மற்றும் மத்திய மாகாண அமைப்பாளர்களுடனான சந்திப்பு நேற்று (13.01)  ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்றது. இதில் கருத்துத் தெரிவிக்கையில் ஜனாதிபதி இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

ஜனாதிபதி தேர்தல் பற்றி பல்வேறு கருத்துக்களை உருவாக்கி, நடைபெறவேண்டியுள்ள மாகாண சபைத் தேர்தலை பிற்போடுவதற்கு சிலர் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

தற்போது 06 மாகாண சபைகளின் நடவடிக்கைகள் செயலிழந்த நிலையில் உள்ளன.  இது ஜனநாயகத்திற்கு ஒருபோதும் நல்லதல்ல. 13ஆவது அரசியலமைப்பு திருத்தத்தின் மூலம் எதிர்பார்க்கப்பட்ட நோக்கங்களுக்கும் முரணானதாகும் என்றும் ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.

இதனால், ஜனாதிபதி தேர்தல் பற்றி பேசுகின்றவர்கள் அதற்கு முன்னர் மாகாண சபை தேர்தலுக்கு தயாராக வேண்டும் எனவும், தான் அது பற்றி தேர்தல்கள் ஆணையாளருடன் கலந்துரையாடியுள்ளதாகவும் கூறியுள்ளார்.

Post a Comment

Recent News

Recent Posts Widget