Ads (728x90)

தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவன்சவினால் நீதிமன்றத் தீர்ப்புக்கமைய வழங்கப்படவுள்ள ஒருகோடி ரூபாய் நஷ்டஈட்டுத் தொகையை, மக்கள் பணிக்காகச் செலவிடப்போவதாக மக்கள் விடுதலை முன்னணியின் பொதுச் செயலாளர் ரில்வின் சில்வா குறிப்பிட்டுள்ளார்.

ஜேவிபியின் புலமைச் சொத்துக்களைக் கையாடி புத்தகமொன்றை வெளியிட்ட குற்றத்திற்காக வர்த்தக மேல் நீதிமன்றம் மனுதாரரான விமல் வீரவன்ச ஒரு கோடி ரூபாயை இழப்பீடாக வழங்க வேண்டுமென கடந்த வெள்ளியன்று தீர்ப்பு வழங்கியுள்ளது.

இத்தீர்ப்புக் குறித்து வினவிய போதே ரில்வின் சில்வா இவ்வாறு கூறியுள்ளார். இந்தப் பணத்திலிருந்து ஒரு சதத்தைக் கூட தான் எடுக்கப்போவதில்லையெனவும் முழுப்பணத்தையும் மக்கள் பணிக்காகவே கட்சித்தலைமைத்துவத்திடம் ஒப்படைக்கப் போவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Post a Comment

Recent News

Recent Posts Widget