எங்களுடைய இனத்தின் உரிமை, சர்வதேச சட்டங்களின் படி, அரசியல் அமைப்பு சட்டங்களின் படி முழுமையாக நிறுவப்பட்டுள்ளதாக பாராளுமன்ற உறுப்பினரும் தமிழரசுக் கட்சியின் தலைவருமான மாவை சேனாதிராஜா தெரிவித்துள்ளார்.மேலும், ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையிலே கொண்டுவரப்பட்ட தீர்மானத்தை அரசாங்கம் ஏற்றுக்கொண்டாலும் தற்போது அந்த தீர்மானத்தை நிறைவேற்ற தவறி வருவதாகவும் மாவை சேனாதிராஜா குற்றம் சாட்டியுள்ளார்.
பாராளுமன்ற உறுப்பினரான எம்.ஏ. சுமந்திரனுக்கு, பருத்தித்துறையில் வடமராட்சி பொது அமைப்புக்களின் ஏற்பாட்டில் நேற்று (16.01) வரவேற்பு நிகழ்வு ஒன்று இடம்பெற்றது.
இந்நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே மாவை சேனாதிராஜா மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
Post a Comment