விவசாயத்துறைக்காக ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன ஆற்றிய அர்ப்பணிப்பை பாராட்டும் வகையில் சர்வதேச நெல் ஆராய்ச்சி நிறுவனத்தின் வளாகம் ஒன்றுக்கு ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவின் பெயரை வைப்பதற்கு பிலிப்பைன்ஸின் லொஸ் பானோஸ்கியில் உள்ள சர்வதேச நெல் ஆராய்ச்சி நிறுவனம் நடவடிக்கை எடுத்துள்ளது.அதற்கான நினைவுப் பலகையை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நேற்று(18.01) திரைநீக்கம் செய்துள்ளார்.
அதனைத் தொடர்ந்து சர்வதேச நெல் ஆராய்ச்சி நிறுவனத்தின் பணிப்பாளர் நாயகம் கலாநிதி மெதிவ் மொரெல் (Dr. Matthew Morell) உடன் ஜனாதிபதி சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.
பிலிப்பைன்ஸின் லொஸ் பானோஸ்கியில் உள்ள சர்வதேச நெல் ஆராய்ச்சி நிறுவனத்திற்கும் இலங்கைக்குமிடையே ஐந்து வருட செயற்திட்டமொன்றும் கைச்சாத்திடப்பட்டுள்ளதாகவும் ஜனாதிபதி செயலகம் மேலும் அறிவித்துள்ளது.
Post a Comment