Ads (728x90)

சிங்கள, தமிழ், முஸ்லிம், பறங்கியர் உள்ளிட்ட சகல இனங்களினதும் பிரச்சினைகள் குறித்து நேரடியாக தலையிட நாம் தயாராகவிருக்கிறோம் என முன்னாள் பிரதமரும் தற்போதைய எதிர்க் கட்சித் தலைவருமாகிய மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

நான்கு வருடங்களின் பின்னர் நாட்டுக்கு பொறுப்புக் கூறக்கூடிய எதிர்க்கட்சித் தலைவர் ஒருவர் எதிர்க்கட்சி தலைமையலுவலகத்தில் அமரக்கிடைத்தமை மிக முக்கியமானதெனவும் அவர் கூறியுள்ளார்.

இதுகாலவரை எதிர்க்கட்சி தலைவர் பதவி ஒரு பிரதேசத்திற்கு மட்டும் மட்டுப்படுத்தப்பட்டதாகவே காணப்பட்டது.

கொழும்பு மாக்கஷ்பெர்ணான்டோ மாவத்தையிலுள்ள எதிர்க் கட்சித் தலைமை அலுவலகத்தில் நேற்று (18) பொறுப்புக்களை ஏற்றுக்கொண்ட அவர் இவ்வாறு கருத்துத் தெரிவித்துள்ளார்.

முழு நாட்டிலுமுள்ள பிரச்சினைகளுக்கு தெளிவான யோசனைகளை முன்வைக்க கூடிய வகையில் செயற்பாடுகளை முன்னெடுக்கூடியதாகவும் சிங்கள, தமிழ், முஸ்லிம், பறங்கியர் உள்ளிட்ட சகல இனங்களினதும் பிரச்சினைகள் குறித்து நேரடியாக தலையிட நாம் தயாராகவிருக்கிறோம் எனவும் அவர் மேலும் கூறியுள்ளார்.

Post a Comment

Recent News

Recent Posts Widget