Ads (728x90)

ஜகர்த்தா இந்தோனேசியாவில் பெண் ஆராய்ச்சியாளர் வளர்த்த 14 அடி நீள முதலையே அவரை கடித்து கொன்று தின்றது.இந்தோனேசியாவின் சுலவேசி தீவை சேர்ந்தவர் டெசி துவோ 44, ஆராய்ச்சியாளரான இவர் வட சுலவேசியில் மினாஹாசாவில் ஆய்வுக்கூடம் வைத்து பல்வேறு ஆராய்ச்சிகளில் ஈடுபட்டு வந்தார்.

இவர் தனது ஆய்வுக் கூடத்தின் அருகில் ஒரு முதலையை மேரி என்று பெயர் வைத்து செல்லப் பிராணியாக வளர்த்து வந்தார். அவர் முதலைக்கு உணவு வழங்கும் போது அவரது கைகளை முதலை கடித்தது. இதனால் நிலை தடுமாறி தண்ணீரில் விழுந்தததில் அவரது கை, வயிற்றுப் பகுதியையும் முதலை தின்று விட்டது. இதில் அவர் உயிரிழந்தார்.

இவர் அனுமதியின்றி முதலையை வளர்த்து வந்தது விசாரணையில் தெரிய வந்தது.


Post a Comment

Recent News

Recent Posts Widget