இங்கிலாந்து ராணி எலிசபெத்தின் கணவரும், பிரிட்டன் இளவரசருமான பிலிப் சென்ற கார் விபத்துக்குள்ளானது. அதிர்ஷ்டவசமாக அவர் காயங்கள் ஏதுமின்றி உயிர் தப்பியுள்ளார். கிழக்கு இங்கிலாந்தின் சாண்ட்ரிகாம் எஸ்டேட் பகுதியில் இந்த சம்பவம் நடந்திருக்கிறது.
காரில் சென்ற இளவரசருடன் மேலும் 2 பேர் இருந்திருக்கின்றனர். அவர்களுக்கு லேசான காயம் ஏற்பட்டதை தொடர்ந்து இருவரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இளவரசரின் லேண்ட் ரோயர் கார் சாலையோரத்தில் கவிழ்ந்து கிடப்பதை படத்தில் காணலாம். ஓடுபாதையில் இருந்து விலகிச் சென்றதால் கார் விபத்துக்குள்ளாகி இருப்பதாக பிபிசி செய்தி நிறுவனம் தகவல் தெரிவித்துள்ளது.
Subscribe to:
Post Comments (Atom)
Post a Comment