Ads (728x90)

விசேட பிராந்தியங்கள் வேலைத்திட்டங்களுக்கான அமைச்சரவை அந்தஸ்தில்லா அமைச்சராக தான் பதவிப்பிரமாணம் செய்துக்கொண்டதாக தமிழ் முற்போக்கு கூட்டணியின் நாடாளுமன்ற உறுப்பினர் வீ.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

இன்று முற்பகல் ஜனாதிபதி உத்தியோகபூர்வ இல்லத்தில் இந்த பதவிப்பிரமாண நிகழ்வு இடம்பெற்றதாக அவர் தெரிவித்தார்.

இதேவேளை , தொழிலாளர் மற்றும் தொழிற்சங்க உறவுகள் தொடர்பான அமைச்சரவை அந்தஸ்தில்லா அமைச்சராக ரவிந்திர சமரவீரவும் , துறைமுகங்கள் மற்றும் கப்பற்றுறை பிரதி அமைச்சராக அப்துல்லாஹ மஹரூப்வும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முன்னிலையில் பதவிப்பிரமாணம் செய்துக்கொண்டுள்ளனர்.

Post a Comment

Recent News

Recent Posts Widget