
நேற்று (12.01) இரவு சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
சிவனொளிபாத மலைக்கு வருகை தந்த இளைஞர்களே இவ்வாறு கைது செய்யபட்டுள்ளதாகவும், ஹட்டன், வட்டலை, தியகல பகுதியில் மேற்கொள்ளபட்ட விஷேட சுற்றிவளைப்பின் போது கேரளா கஞ்சா, ஹெரோயின் போன்ற போதை பொருள் வசம் இருந்தமை தொடர்பிலேயே குறித்த இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
கொழும்பு, மாத்தறை, காலி பகுதிகளை சேர்ந்த 20 தொடக்கம் 25 வயதுடைய இளைஞர்களே இவ்வாறு கைது செய்யபட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
கைது செய்யபட்ட 15 சந்தேக நபர்களும் ஹட்டன் நீதவான் முன்னிலையில் முன்னிலை படுத்தபட உள்ளதாக ஹட்டன் குற்றத்தடுப்பு பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.
சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரனைகளை ஹட்டன் குற்றத் தடுப்பு பொலிஸார் மேலதிக விசாரனைகளை மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடதக்கது
Post a Comment