
இந்த புதிய கட்சிக் காரியாலயம் முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா குமாரதுங்கவின் தலைமையிலும், ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் பாராளுமன்ற, மாகாண சபை மற்றும் பிரதேச சபை ஆகிய உறுப்பினர்களின் பங்களிப்புடனும் அடுத்த வாரம் ஆரம்பிக்கவுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
இந்த புதிய கட்சிக் காரியாலயத்துக்காக ராஜகிரிய பிரதேசத்தில் கட்டிடமொன்று கட்சி உறுப்பினர்களினால் பெறப்பட்டுள்ளதாகவும் சகல வசதிகளுடன் உள்ள இக்கட்சிக் காரியாலயம் எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலின் போது முக்கிய கேந்திர நிலையமாக செயற்படவுள்ளதாகவும் அக்கட்சியின் ஒருங்கமைப்பாளர் பண்டார மேலும் குறிப்பிட்டுள்ளார்.
மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான கூட்டணி டீ.ஏ. ராஜபக்ஷவை முதன்மைப்படுத்திய நடவடிக்கையை முன்னெடுத்து வருவதனால், எஸ்.டபிள்யு.ஆர்.டீ. பண்டார நாயக்கவின் சின்னங்கள் அழிக்கப்படுவதாகவும், இருட்டடிப்புச் செய்யப்பட்டு வருவதாகவும் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் குழுவினால் குற்றம்சாட்டப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
Post a Comment