Ads (728x90)

இந்தியா மற்றும் ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையே இதுவரை நடைபெற்ற மூன்று டெஸ்ட் போட்டிகளில் இந்திய அணி 2-1 என்ற கணக்கில் முன்னிலை பெற்றுள்ள நிலையில் இன்று சிட்னியில் 4வது டெஸ்ட் போட்டி ஆரம்பமாகியுள்ளது. இன்றைய போட்டியில் டாஸ் வென்ற இந்திய கேப்டன் கோஹ்லி பேட்டிங்கை தேர்வு செய்தார்

கே.எல்.ராகுல், மயாங்க் அகர்வால் ஆகியோர் தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கினர். இந்த போட்டியிலும் ஓப்பனிங் பேட்ஸ்மேன் ராகுல் 9 ரன்களுக்கு இரண்டாவது ஓவரிலேயே ஆட்டமிழந்தார். இதனையடுத்து தற்போது புஜாரா மற்றும் அகர்வால் ஆடி வருகின்றனர்.

அகர்வால் 50 பந்துகளில் 29 ரன்கள் அடித்துள்ளார். இந்திய அணி சற்றுமுன் வரை 17.3 ஓவர்களில் 1 விக்கெட் இழப்பிற்கு 53 ரன்கள் எடுத்துள்ளது.இந்த டெஸ்ட் போட்டியில் வெற்றி பெற்றால் ஆஸ்திரேலியாவை அதன் சொந்த மண்ணில் தொடரை வென்ற பெருமையும், தோல்வி அடைந்தால் தொடரை சமன் செய்ததாகவும் அமையும்

Post a Comment

Recent News

Recent Posts Widget