Ads (728x90)

ரஜினிகாந்தின் ‘பேட்ட’, அஜித்குமாரின் ‘விஸ்வாசம்’ படங்கள் பொங்கல் பண்டிகையையொட்டி கடந்த வாரம் 10-ந் தேதி திரைக்கு வந்து ஓடிக்கொண்டிருக்கிறது.

இரண்டும் பெரிய பட்ஜெட் படங்கள் என்பதால் ஒரே நேரத்தில் வெளியானால் வசூல் பாதிக்கும் என்றும், எனவே ஒரு படத்தை சில நாட்கள் தள்ளி வெளியிடும்படியும் தியேட்டர் அதிபர்கள் தரப்பில் வற்புறுத்தப்பட்டது.

ஆனால் அதை ஏற்காமல் இரண்டும் ஒன்றாக திரைக்கு வந்தன. இரண்டு படங்களுக்கும் ஆரம்பத்தில் இருந்தே ரசிகர்கள் மத்தியில் வரவேற்பு இருந்தது. தொடர்ச்சியாக விடுமுறை இருந்ததால் ஒரு வாரத்துக்கு தியேட்டர்கள் ஹவுஸ்புல் ஆக நிரம்பின. பேட்ட படம் தெலுங்கு, இந்தி மொழிகளிலும் வெளியானது. அமெரிக்கா, சிங்கப்பூர், மலேசியா உள்ளிட்ட வெளிநாடுகளிலும் 2 படங்களையும் திரையிட்டனர்.

இரண்டு படங்களும் நல்ல வசூல் பார்த்து வருகிறது. தமிழ்நாட்டில் மட்டும் இரண்டு படங்களும் ரூ.200 கோடிக்கு மேல் வசூல் ஈட்டி இருப்பதாக பிரபல தயாரிப்பாளர் தனஞ்செயன் தெரிவித்துள்ளார். வெளிநாடுகளிலும் ரூ.100 கோடிக்கு மேல் வசூல் குவித்து உள்ளன.

2 படங்களின் மொத்த வசூல் ரூ.300 கோடியை தாண்டி இருப்பதாக கூறப்படுகிறது. இந்த தொகை மேலும் உயரும் என்று எதிர்பார்க்கின்றனர். இதனால் தயாரிப்பாளர்கள், வினியோகஸ்தர்கள், தியேட்டர் அதிபர்கள் வருட ஆரம்பத்திலேயே நல்ல லாபம் பார்த்த சந்தோஷத்தில் இருக்கிறார்கள்.

Post a Comment

Recent News

Recent Posts Widget