எஸ்.டபிள்யூ.ஆர்.டி.பண்டாரநாயக்கவின் ஆட்சியையும், கொள்கைகளையும் விற்றுத் தின்றவர்களும், கொலைகாரர்களும் தற்போதும் செயற்பட்டுக் கொண்டுதான் இருக்கின்றனர். பண்டாரநாயக்கவின் கொள்கைகளை உண்மையாக ஏற்றுக் கொண்ட சுதந்திரக் கட்சி உறுப்பினர்கள் எம்முடனேயே உள்ளனர்.இவ்வாறு முன்னாள் அரச தலைவர் சந்திரிகா பண்டாரநாயக்க குமாரறணதுங்க தெரிவித்தார்.
சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் நிறுவுநர் எஸ்.டபிள்யூ.ஆர்.டி.பண்டா ரநாயக்கவின் 120ஆவது நினைவு தினம் நேற்றுக் காலிமுகத் திடலில் நடைபெற்றது.
அதில் கலந்துகொண்ட பின்னர் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவித்தபோதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
இந்த நிகழ்வில் அரச தலைவர் மைத்திரிபால சிறிசேனவும் கலந்து கொண்டு பண்டாரநாயக்கவுக்கு அஞ்சலி செலுத்தினார்.
இந்த நிகழ்வில் சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலர் தயாசிறி ஜயசேகர, ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் பொதுச் செயலர் மகிந்த அமரவீர, முன்னாள் பொதுச் செயலர் ரோஹண லக்ஸ்மன் பியதாச உட்படப் பல சுதந்திரக் கட்சி உறுப்பினர்கள் கலந்துகொண்டனர்.
Post a Comment