
இரு அணிகள் இடையிலான 3 ஆட்டங்கள் கொண்ட ஒருநாள் போட்டி தொடரில் சிட்னியில் நடந்த முதலாவது ஆட்டத்தில் 34 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலிய அணியும், அடிலெய்டில் நடந்த 2-வது ஆட்டத்தில் 6 விக்கெட் வித்தியாசத்தில் இந்திய அணியும் வெற்றி பெற்றன. இதனால் தொடர் 1-1 என்ற கணக்கில் சமநிலையில் உள்ளது.
இந்த நிலையில் இந்தியா-ஆஸ்திரேலியா அணிகள் இடையிலான 3-வது மற்றும் கடைசி ஒருநாள் கிரிக்கெட் போட்டி இன்று (வெள்ளிக்கிழமை) மெல்போர்னில் நடைபெற்று வருகிறது. இப்போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி, ஆஸ்திரேலியாவை பேட் செய்யுமாறு பணித்தார்.
இதன்படி இந்திய அணி முதலில் பந்து வீசி வருகிறது. இந்திய அணியில், அம்பத்தி ராயுடு, முகம்மது சிராஜ், குல்தீப் யாதவ் கழற்றி விடப்பட்டுள்ளனர். அவர்களுக்கு பதிலாக தமிழக வீரர் விஜய்சங்கர், கேதர் ஜாதவ், சேஹல் ஆகியோர் அணியில் இடம் பிடித்துள்ளனர்.
Post a Comment