இவ்வருடத்துக்கான வரவு செலவுத் திட்டத்தை எதிர்வரும் மார்ச் மாதம் 05 ஆம் திகதி பாராளுமன்றத்தில் முன்வைக்க அமைச்சரவை நேற்று (02.01) அனுமதி வழங்கியுள்ளது.இதற்கான கணக்கு அறிக்கை எதிர்வரும் திங்கட்கிழமை நடைபெறவுள்ள அமைச்சரவைக் கூட்டத்தில் முன்வைக்கவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
கணக்கு அறிக்கையை எதிர்வரும் 8 ஆம் திகதி சமர்ப்பிப்பதற்கு நிதி அமைச்சர் மங்கள சமரவீர தயாராக இருந்ததாகவும், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் பதவி ஏற்பு நினைவு தினம் எதிர்வரும் 8 ஆம் திகதி நடைபெறவுள்ளதனால் அதற்கு முன்னர் இந்த அறிக்கையை சமர்ப்பிக்குமாறு ஜனாதிபதி உத்தரவிட்டுள்ளதாகவும் குறிப்பிடப்படுகின்றது.
இவ்வருடத்துக்கான வரவு செலவுத் திட்டம் நவம்பர் மாதம் 05 ஆம் திகதி நிதி அமைச்சரினால் முன்வைக்கப்பட திட்டமிடப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
Post a Comment