சீனாவின் தென்மேற்கே சிச்சுவான் மாகாணத்தின் காங்சியான் கவுண்டி பகுதியில் யிபின் நகரில் இன்று கடுமையான நிலநடுக்கம் ஏற்பட்டது.இது ரிக்டர் அளவுகோலில் 5.3 ஆக பதிவானது. இந்நிலநடுக்கம் 15 கி.மீட்டர் ஆழத்தில் மையம் கொண்டுள்ளது என சீன நிலநடுக்க நெட்வொர்க் மையம் தெரிவித்துள்ளது.
இதனால் ஏற்பட்ட உயிரிழப்பு அல்லது பொருட்சேதம் பற்றிய தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை.
Post a Comment