Ads (728x90)

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னணி பேட்ஸ்மேன் ரோகித் சர்மா. நிறைமாத கர்ப்பிணியாக இருந்த அவரது மனைவி ரித்திகாவுக்கு நேற்று பெண் குழந்தை பிறந்தது.

ஆஸ்திரேலிய தொடரில் பங்கேற்றுள்ள ரோகித் சர்மா தந்தை ஆன தகவல் அறிந்ததும் உடனடியாக அங்கிருந்து மும்பைக்கு புறப்பட்டார்.

இதனால் சிட்னியில் 3-ந்தேதி தொடங்கும் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான கடைசி டெஸ்டில் அவர் ஆடமாட்டார் என்றும், ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒரு நாள் தொடருக்கு முன்பாக வருகிற 8-ந்தேதி அணியுடன் இணைவார் என்றும் கிரிக்கெட் வாரியம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ரோகித் சர்மாவுக்கு பதிலாக மாற்று வீரர் அறிவிக்கப்படவில்லை. அதனால் சிட்னி டெஸ்டில் முரளிவிஜய், லோகேஷ் ராகுல், ஹர்திக் பாண்ட்யா ஆகியோரில் ஒருவருக்கு வாய்ப்பு கிடைக்கலாம்.

Post a Comment

Recent News

Recent Posts Widget