Ads (728x90)

நடிகை கஸ்தூரி சமூக, அரசியல் விஷயங்களை சமூக வலைத்தளத்தில் துணிச்சலாக பேசி வருகிறார். அவரை ஒரு அரசியல் கட்சியில் சேர்க்க முயற்சி நடந்தது. இப்போது எந்த கட்சியிலும் சேரமாட்டேன் என்று மறுத்தார். ரஜினிகாந்த் படத்தை டுவிட்டர் முகப்பில் வைத்திருந்த ஒருவர் கஸ்தூரி பற்றி அவதூறாக பேசியதால் அவருடன் மோதினார்.

ரஜினி பெயரை கெடுக்க இதுமாதிரி எத்தனைபேர் அலைகிறார்களோ? என்றார். இந்த நிலையில் அஜித் ரசிகர்களுக்கும் கஸ்தூரிக்கும் சில நாட்களாக மோதல் நீடித்து வருகிறது. ‘தல’ வார்த்தையுடன் தன்பெயரை வைத்திருந்த ரசிகர் கஸ்தூரியின் பதிவுக்கு ஆபாசமான கருத்தை வெளியிட்டார்.

இதுபோல் அவரது இன்னொரு பதிவையும் அஜித் பெயரை சேர்த்து தனது பெயரில் வைத்திருந்த ஒருவர் கண்டித்தார். இதற்கு பதில் அளித்த கஸ்தூரி இது தெரிந்துதான் ரசிகர் மன்றத்தை எப்போதோ கலைத்து விட்டார் என்றார். தனிப்பட்ட ஒருவர் கருத்துக்காக அஜித் பெயரை இழுக்க வேண்டாம் என்று அவரது ரசிகர்கள் கஸ்தூரியை கடுமையாக கண்டித்தனர்.

இந்த மோதல் நீடித்த நிலையில் தற்போது இன்னொரு ரசிகரும் கஸ்தூரி பற்றி அவதூறு கருத்தை பதிவிட்டுள்ளார். இதற்கு பதிலளிக்கும் விதமாக கஸ்தூரி, “மானம் ரோஷம் உள்ள அஜித் ரசிகர்களுக்கு அன்பான வேண்டுகோள். இந்த கூமுட்டையின் விவரம் தெரிந்தவர்கள் என்னை அணுகவும்” என்று பதிவிட்டுள்ளார். இவர்கள் மோதல் சமூக வலைத்தளத்தில் பரபரப்பாக உள்ளது.

Post a Comment

Recent News

Recent Posts Widget