Ads (728x90)

தேசிய பொலிஸ் ஆணைக்குழுவை உருவாக்கி பொலிஸார் சுயாதீனமாக செயற்படுவதற்கான சூழலை உருவாக்கியுள்ளதால் போதைப் பொருள் வர்த்தக சுற்றிவளைப்புக்கு எதிரான அரசியல் அழுத்தம் நிறுத்தப்பட்டுள்ளதாகவும் அரநாயக்கவில் இடம் பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றும்போது பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

இதன் பிரதிபலன்களை இலங்கைக்குள்ளும், வெளியிலும் பெற்றுக் கொள்ள முடிந்துள்ளதாகவும் இதற்கிணங்க பொலிஸ் விசேட செயலணி மற்றும் பொலிஸ் போதைப்பொருள் தடுப்புப் பிரிவு அதிகாரிகள் இணைந்து மீண்டும் பாரியளவு போதைப்பொருட்களைக் கைப்பற்றியுள்ளதாகவும் பிரதமர் தெரிவித்துள்ளார்.

இந்த வெற்றிகரமான சுற்றிவளைப்பில் சம்பந்தப்பட்ட அனைத்து அதிகாரிகளுக்கும் தனது நன்றியினைத் தெரிவித்துக் கொள்வதாகவும் பிரதமர் தெரிவித்துள்ளார்.

Post a Comment

Recent News

Recent Posts Widget