ETI நிதி நிறுவனத்தின் சொத்துக்களை விற்பனை செய்வதற்கான கொடுக்கல் வாங்கல் தொடர்பாக தேசிய பொருளாதார சபை விசேட கவனம் செலுத்தியுள்ளதுடன், இக்கொடுக்கல் வாங்கல் தொடர்பில் ஆராய்ந்த தேசிய பொருளாதார சபை தனது பரிந்துரைகளை சமர்ப்பித்துள்ளது. 2015 – 2018 ஆண்டு காலப்பகுதியில் இந்நிறுவனத்தை கொள்வனவு செய்வதற்கு மூன்று நிறுவனங்கள் விருப்பம் தெரிவித்திருந்ததுடன், அவற்றுள் இரண்டு உள்நாட்டு நிறுவனங்களும், ஒரு வெளிநாட்டு நிறுவனமும் உள்ளடங்குகின்றன.
இதன்போது உள்நாட்டு நிறுவனங்கள் தொடர்பில் போதுமான கவனம் செலுத்தப்பட்டுள்ளதா? என்பதும் இக்கொடுக்கல் வாங்கல்களின்போது வைப்பீட்டாளர்களுக்கு செலுத்துவதற்காக அதிகபட்ச நிதியை பெற்றுக்கொள்வதற்காக உரிய முறையில் பேரம் பேசப்பட்டதா? என்பதும் தெளிவற்றதாக காணப்படுவதாக தேசிய பொருளாதார சபை தெரிவித்துள்ளது. அத்துடன், இம் மூன்று நிறுவனங்களும் தமது விலைமனுக்களை சமர்ப்பிப்பதற்காக சம சந்தர்ப்பங்கள் அளிக்கப்பட்டதா? என்பதும் நிச்சயமற்றிருப்பதாக அவதானிக்கப்பட்டுள்ளது.
வைப்பீட்டாளர்களுக்கு நிவாரணம் வழங்குவதற்காக அந்நிறுவனத்தின் சொத்துக்களை விற்பனை செய்யும் நடவடிக்கையும் தற்போது நடைபெற்று வருவதோடு, இக்கொடுக்கல் வாங்கல் தொடர்பிலும் இதன்போது விசாரணை செய்யப்பட்டுள்ளது. அதற்கமைய ETI நிறுவனத்தின் 20 சதவீத வைப்பீடுகள் தற்போது மீளச் செலுத்தப்பட்டுள்ளதுடன், மேலும் 10 சதவீத வைப்பீடுகளை வெகுவிரைவில் மீளச் செலுத்த முடியுமெனவும் மத்திய வங்கி தெரிவித்துள்ளது.
Post a Comment