Ads (728x90)

சேவையில் உள்ள 2,40,000 ஆசிரியர்களில் தினமும் 20,000 பேர் விடுமுறையில் செல்வதாகவும் ஆசிரியர் பற்றாக்குறைக்கு விரைவில் தீர்வு காணப்படும் என்றும் கல்வியமைச்சர் அகிலவிராஜ் காரியவசம் பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் நேற்று கல்வியமைச்சின் நிதியொதுக்கீடு குழுநிலை விவாதத்திற்குப் பதிலளித்து உரையாற்றும் போதே அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார்.

ஆசிரியர்களின் சம்பளப் பிரச்சினைக்குத் தீர்வுகாணும் வகையில் தொழிற்சங்கங்களுடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு சம்பள ஆணைக்குழுவுக்கு விடயங்கள் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.

அபிவிருத்தி என்ற போர்வையில் பாடசாலைகளில் பணம் அறவிடுவதை முற்றாகத் தடைசெய்யும் வகையில் விசேட சுற்று நிருபம் ஒன்றை வெளியிடவுள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.

நாட்டில் 2,40,000 ஆசிரியர்கள் சேவையில் உள்ளனர். இவர்களில் தினமும் 10,000 பேர் மகப்பேற்று விடுமுறை பெறுவதுடன் மேலும் 10,000 பேர் ஏனைய விடுமுறைகளில் செல்கின்றனர். ஆசிரியர் பற்றாக்குறைக்கு இதுவும் ஒரு காரணமாகும் எனவும் தெரிவித்தார்.

Post a Comment

Recent News

Recent Posts Widget