Ads (728x90)

2009 ஆம் ஆண்டு யுத்தம் முடிவிற்கு கொண்டு வராமல் இருந்திருந்தால் இன்று மொத்த சனத்தொகையில் பெரும்பாலானோர் உயிரிழந்திருப்பார்கள் என மாத்தளை முவன்தெனிய பிரதேசத்தில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்துக் கொண்டு  கருத்துரைக்கும் போது  எதிர்க்கட்சி தலைவர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார்.

பாரிய போராட்டத்திற்கு மத்தியிலே 30 வருட கால யுத்தம் வெற்றிக் கொள்ளப்பட்டது. ஆனால் யுத்தத்தை  வெற்றிக் கொண்ட இராணுவத்தினர் இன்று தண்டிக்கப்பட்டுகின்றனர். எமது இராணுவத்தினர் 09 பேருக்கு  வெளிநாடு செல்வதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

சில நாடுகள் குறிப்பிட்ட சில விடயங்களை முன்னிலைப்படுத்தி இராணுவத்தினரை  நாட்டுக்குள் அனுமதிப்பதும் இல்லை. இவை அனைத்தும் ஒருதலை பட்சமான செயற்பாடாகும் எனவும் இதன்போது குறிப்பிட்டார்.

Post a Comment

Recent News

Recent Posts Widget