2019 ஆம் ஆண்டுக்கான ஐக்கிய தேசிய முன்னணி அரசின் வரவு செலவுத் திட்டம் எதிர்வரும் 5 ஆம் திகதி பிற்பகல் 2 மணிக்கு பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளது.
நிதி அமைச்சர் மங்கள சமரவீரவால் முன்வைக்கப்படும் 2019 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தில் வழமைபோல் இம்முறையும் பாதுகாப்பு அமைச்சுக்கே கூடுதல் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
5 ஆம் திகதி நிதி அமைச்சரின் வரவு செலவுத் திட்ட உரையும், 6 ஆம் திகதி முதல் 12 ஆம் திகதி வரை இரண்டாம் வாசிப்பு மீதான விவாதமும் நடைபெறும். 12 ஆம் திகதி மாலை 5 மணிக்கு வாக்கெடுப்பு இடம்பெறும்.
அமைச்சுகளுக்கான நிதி ஒதுக்கீடு தொடர்பான குழுநிலை விவாதத்துக்கு 19 நாட்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. இதன்படி 13 ஆம் திகதி முதல் ஏப்ரல் 4ஆம் திகதி வரை குழுநிலை விவாதம் நடைபெற்று, 5 ஆம் திகதி வரவு செலவுத் திட்டத்தின் மீது இறுதி வாக்கெடுப்பு நடாத்தப்படும்.
Subscribe to:
Post Comments (Atom)
Post a Comment