Ads (728x90)

நோர்வேயின் வெளிவிவகார இராஜாங்க அமைச்சர் மரியன் ஹகென் இரண்டு நாட்கள் பயணமாக அடுத்த வாரம் இலங்கை வருகின்றார். அவர் இலங்கையில் எதிர்வரும் மார்ச் 05ஆம், 06ஆம் திகதிகளில் தங்கியிருப்பார் என்று அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதன்போது அவர், பிரதமர் ரணில் விக்ரமசிங்க, வெளிவிவகார அமைச்சர் திலக் மாரப்பன, நிதியமைச்சர் மங்கள சமரவீர ஆகிய அரச தரப்பு தலைவர்களைச் சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தவுள்ளார்.

அத்துடன் காணாமல் போனோருக்கான பணியகம், மனித உரிமைகள் ஆணைக்குழு, சிவில் சமூக, வணிக சமூகப் பிரதிநிதிகளையும் அவர் சந்திப்பார். வடக்கு மாகாணத்துக்குப் பயணம் மேற்கொள்ளவுள்ள அவர், அங்கு கண்ணிவெடிகளை அகற்றும் பணிகளையும் பார்வையிடவுள்ளார்.

Post a Comment

Recent News

Recent Posts Widget