கல்விப் பொதுத்தராதர சாதாரணத் தர பரீட்சையின் முடிவுகள் இந்த மாத இறுதியில் வெளியாக்கப்படும் என்று பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.பரீட்சைகள் ஆணையாளர் சனத் பூஜித்த இதனைத் தெரிவித்துள்ளார்.
இதற்கான இறுதி நடவடிக்கைகள் நிறைவு செய்யப்பட்டுள்ளன.
2018ம் ஆண்டு 4 ஆயிரத்து 661 மத்திய நிலையங்களில் கல்விப் பொதுத் தராதர சாதாரணத் தரப் பரீட்சை இடம்பெற்றிருந்தது.
இதில் 6 லட்சத்து 56 ஆயிரத்து 641 பேர் தோற்றி இருந்தனர்.
கடந்த டிசம்பர் மாதம் 12ம் திகதி பரீட்சைகள் நிறைவடைந்த நிலையில், வினாத்தாள் திருத்தப் பணிகள் அதே மாதம் 23ம் திகதி ஆரம்பமாகி இருந்தன.
Post a Comment