இதனையடுத்து கடந்த 2011 ஆம் ஆண்டு அமெரிக்க ராணுவம்
யாருக்கும் தெரியாமல் பாகிஸ்தான் நாட்டுக்குள் சென்று அங்கு இருந்த ஒசாமாவை அதிரடியாக தாக்கி கொன்றது.
இந்நிலையில் ஒசாமாவின் மகனான ஹம்சா பின்லேடன் வீடியோ ஒன்றை வெளியிட்டான். அதில் ஒசாமாவின் மறைவுக்கு காரணமான அமெரிக்காவுக்கு பதிலடி கொடுக்கும் விதத்தில் அனைத்து தீவிரவாத இயக்கங்களும் ஒன்றுபட வேண்டும் என பேசினார். தற்போது இவர்தான் அல்கொய்தா இயக்கத்தின் தலைவராக இருப்பதாகவும் தகவல் வெளியாகின்றது.
இதனையடுத்து ஹம்சா பின்லேடனை தேடப்படும் முக்கிய சர்வதேச தீவிரவாதியாக அறிவித்தது. இந்நிலையில் ஹம்சா பின்லேடனை தேடும் பணியை அமெரிக்கா முழு வீச்சில் முடுக்கி விட்டுள்ளது. ஹம்சா பின்லேடன் பற்றிய தகவல் தருவோருக்கு ரூ. 7 கோடி பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது.
Post a Comment