Ads (728x90)

அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தலில் மைத்திரிபால சிறிசேனவை வேட்பாளராக நியமிப்பது உறுதி என ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச்செயலாளரும், பாராளுமன்ற உறுப்பினருமான தயாசிறி ஜயசேகர கண்டியில் சனிக்கிழமை இடம் பெற்ற நிகழ்வு ஒன்றில் தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், அடுத்த ஜனாதிபதித் தேர்தலில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை வேட்பாளராக நியமிப்பது உறுதி. கட்சி என்ற வகையில் அவரை வேட்பாளராக தெரிவு செய்ய எமக்கு உரிமையுள்ளது.

எமது கட்சியை கட்டியெழுப்புவது போன்று, கட்சியின் தலைவரையும் உருவாக்க வேண்டும். மகிந்த ராஜபக்ஷவுக்கு மூன்றில் இரண்டு பெரும்பான்மை இருந்ததால் அவர் நினைத்தவற்றை செய்தார்.

கடந்த நல்லாட்சியில் முழுமையான அதிகாரத்தை ஐக்கிய தேசியக் கட்சிக்கு வழங்கியதுபோல் வழங்கினால், சுதந்திரக் கட்சியினர் அடிபடுவது நிச்சயம். நாம் அன்று இணையாவிட்டால் நாடு அநாதையாக்கப்பட்டிருக்கும்.

பொதுஜன பெரமுன தரப்பினர் அடுத்த ஜனாதிபதி வேட்பாளரை தெரிவு செய்துவிட்டதாக கூறுகின்றனர். ஆனால் சுதந்திரக் கட்சி இது குறித்து பேச்சுவார்த்தைகளை நடத்தி வருகின்றது. நாட்டை கருத்திற்கொண்டே நாம் முடிவை எடுப்போம்.

Post a Comment

Recent News

Recent Posts Widget