Ads (728x90)

புல்வாமா தாக்குதலுக்கு பழிவாங்கும் வகையில் கடந்த 26-ந்தேதி இந்திய விமானங்கள் பாகிஸ்தானுக்குள் நுழைந்து தீவிரவாதிகள் முகாம் மீது தாக்குதல் நடத்தியது. அடுத்தநாள் காலையில் அதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் பாகிஸ்தான் விமானங்கள் இந்திய பகுதிக்குள் தாக்குதல் நடத்துவதற்கு வந்தன. உடனே இந்திய போர் விமானங்கள் அவற்றை விரட்டிச் சென்றன.

அதில் மிக்-21 என்ற விமானத்தை ஓட்டிச் சென்ற அபிநந்தன் பாகிஸ்தானின் எப்-16 ரக விமானத்தை விரட்டிச் சென்று ஏவுகணையால் சுட்டு வீழ்த்தினார். அந்த விமானம் வெடித்து சிதறி கீழே விழுந்தது. அடுத்த வினாடி அபிநந்தன் ஓட்டிச் சென்ற விமானத்தின் மீது பாகிஸ்தான் ஏவுகணை வீசி தாக்கியது. அதில் அபிநந்தனின் விமானமும் வெடித்து சிதறி கீழே விழுந்தது.

இந்த நேரத்தில் அபிநந்தன் பாராசூட் மூலம் கீழே குதித்தார். அதேபோல அபிநந்தனால் வீழ்த்தப்பட்ட பாகிஸ்தான் விமானத்தில் இருந்தும் விமானி பாராசூட்டில் கீழே குதித்தார். அபிநந்தனும், பாகிஸ்தான் பைலட்டும் தனித்தனி இடத்தில் பாராசூட்டில் இறங்கினார்கள். அபிநந்தனை கிராம மக்கள் சுற்றி வளைத்து பிடித்தனர். பின்னர் ராணுவம் வந்து அவரை மீட்டது.

அதே நேரத்தில் பாகிஸ்தான் பைலட் விழுந்த இடத்தையும் கிராம மக்கள் சுற்றி வளைத்தனர். ஆனால் அவர் பாகிஸ்தான் விமானி என்று அவர்களுக்கு தெரியவில்லை. அவர் இந்திய விமானி என கருதி அவரை சரமாரியாக தாக்கியதில் அவர் படுகாயம் அடைந்த நிலையில் சிகிச்சை பலனின்றி விமானி உயிரிழந்துள்ளார்.

Post a Comment

Recent News

Recent Posts Widget