Ads (728x90)

மாந்தை சந்தியில் பல வருட காலமாக காணப்பட்ட திருகேதீஸ்வரம் ஆலயத்தின் அலங்கார பலகை சேதப்படுத்தப்பட்டுள்ளதாக திருகேதீஸ்வர ஆலய நிர்வாகம் நிர்வாகத்தின் அதிகாரி தெரிவித்துள்ளார்.

சிவராத்திரி தினத்தை முன்னிட்டு, அந்த அலங்கார பலகையை தாம் புதுப்பிக்க சென்ற வேளையில், கிறிஸ்தவ பாதிரியார்களின் தலைமையிலான சில குழுவினர் அவ்விடத்திற்கு வந்து அதற்கு இடையூறு விளைவித்ததாக அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

தற்காலிகமாக நிர்மாணிக்கப்பட்டிருந்த அலங்கார பலகையையும் பாதிரியார்கள் தலைமையிலான குழுவினர் உடைத்தெறிந்துள்ளதாகவும் அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.

திருகேதீஸ்வரம் ஆலயத்தின் நிரந்தர அலங்கார பலகையை அந்த இடத்தில் ஸ்தாபிப்பதற்கான அனுமதி தம்வசம் காணப்படுவதாக சுட்டிக்காட்டிய அவர், அதற்கு வீதி அபிவிருத்தி அதிகார சபை மற்றும் மன்னார் பிரதேச சபை ஆகியவற்றின் ஆவணங்களும் தம்மிடம் காணப்படுவதாக குறிப்பிட்டார்.

இந்த நிலையிலேயே, குறித்த பாதிரியார்கள் தலைமையிலான குழு, இந்த அலங்கார பலகையை உடைத்தெறிந்துள்ளதாக திருகேதீஸ்வர ஆலய நிர்வாக அதிகாரி கூறினார்.

Post a Comment

Recent News

Recent Posts Widget