ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரிட்டன் வெளியேறுவது தொடர்பான அந்த உடன்படிக்கைக்கு கடந்த செவ்வாய்க்கிழமை நடந்த வாக்கெடுப்பில் பாராளுமன்ற உறுப்பினர்கள் 391 பேர் எதிராகவும், 242 பேர் ஆதரவாகவும் வாக்களித்தனர்.
உடன்படிக்கை தொடர்பில் அன்றைய தினம், தெரேசா மே ஐரோப்பிய ஒன்றிய ஆணையத் தலைவர் ஷொன் க்ளோட்டைச் சந்தித்ததாகவும், சாத்தியமான சிறந்த உடன்படிக்கையை ஒன்றியத்திடமிருந்து தான் பெற்றுள்ளதாக அவர் கூறினார். இருந்தும் அது நிராகரிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்தும் போராடப் போவதாகப் பிரிட்டன் பிரதமர் தெரிவித்துள்ளார்.
பிரெக்சிட் திட்டத்தின்படி ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து இன்னும் 16 நாளில் பிரிட்டன் வெளியேற வேண்டும். அப்படி வெளியேறும்போது பிற ஐரோப்பிய நாடுகளுடன் அது கொள்ள வேண்டிய உறவு தொடர்பாக ஐரோப்பிய ஒன்றியமும் பிரிட்டனும் ஒப்பந்தம் ஒன்றை செய்துகொள்ள திட்டமிடுகின்றன.

Post a Comment