தனியார் நிறுவனமொன்றினால் 380 மில்லியன் ரூபா செலவில் வவுனியா மாமடுவில் அமைக்கப்பட்ட சூரிய மின்கலத்தொகுதி மின்சக்தி எரிசக்தி அமைச்சர் ரவி கருணாநாயக்கவினால் நேற்று திறந்து வைக்கப்பட்டது.
சூரிய மின்சக்தி அதிகாரசபையின் ஏற்பாட்டில் 10 ஏக்கர் நிலப்பரப்பில் 'வின்போஸ்' என்ற தனியார் நிறுவனத்தால் அமைக்கப்பட்ட சூரிய சக்தி மின்கலத் தொகுதியிலிருந்து நாளாந்தம் 7000 வோல்டேஜ் மின்சக்தி உற்பத்திசெய்யபடும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
இதன் மூலம் உற்பத்தி செய்யப்படும் மின்சக்தியானது இலங்கை மின்சார சபைக்கு வழங்கப்பட்டு தேசிய ரீதியில் பயன்படுத்தப்படவுள்ளது.
எவ்வித நிபந்தனைகளும் இன்றியே தமிழ் தேசியக் கூட்டமைப்பு வரவு செலவுத் திட்டத்திற்கு ஆதரவளித்ததாக மின்சக்தி எரிசக்தி அமைச்சர் ரவி கருணாநாயக்க மேலும் தெரிவித்தார்.
தமிழ் தேசியக் கூட்டமைப்பு நிபந்தனைகளை விதித்ததாகக் கூறப்படுவது அப்பட்டமான பொய் எனவும் அனைத்து இன மக்களும் ஒன்றிணைந்து செயற்பட வேண்டும் என்பதே ஒரேயொரு நிபந்தனை எனவும் ரவி கருணாநாயக்க குறிப்பிட்டார்.
Subscribe to:
Post Comments (Atom)

Post a Comment