Ads (728x90)

ஐக்கிய தேசியக் கட்சியின் பின்வரிசை உறுப்பினர்கள் புதிய ஆட்சியினை அமைக்க உதவி செய்ய வேண்டும் என எதிர்க்கட்சி தலைவர் மகிந்த ராஜபக்ஷ அழைப்பு விடுத்துள்ளார். வரவு- செலவுத்திட்டம் மீதான விவாதத்தில் பங்கேற்று நேற்று பாராளுமன்றத்தில் உரையாற்றியபோதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

இதன்போது தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர், தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் கூட்டணி அமைத்துக் கொண்டு ஐக்கிய தேசியக் கட்சி நடத்தும் இந்த நான்கு ஆண்டுகால அரசாங்கமே நாட்டினை நாசமாக்கியுள்ளது.

ஐக்கிய தேசியக் கட்சி ஆசியாவின் கீழ்மட்ட நாடாக இலங்கையை மாற்றியுள்ள நிலையில் இனியும் இந்த ஆட்சிக்கு இடமளிக்க முடியாது. ஆகவே ஆளும் கட்சியின் பின்வரிசை உறுப்பினர்கள் எம்முடன் இணைந்து புதிய ஆட்சியமைக்க உதவுங்கள் என தெரிவித்துள்ளார்.                                         



Post a Comment

Recent News

Recent Posts Widget