பெருநகர அபிவிருத்தி அமைச்சினூடாக இந்த ஆண்டு 200 மில்லியன் ரூபாவும் அடுத்த ஆண்டுக்கு 100 மில்லியன் ரூபாவும் ஒதுக்கப்பட்டு அதற்கான அனுமதியும் வழங்கப்பட்டுள்ளது என வலி. தெற்கு பிரதேச சபை தவிசாளரால் அனுப்பி வைக்கப்பட்ட செய்திக் குறிப்பில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சுன்னாகம் பொதுச் சந்தையை நவீன வசதிகளுடனான கட்டடத் தொகுதியாக அமைக்கும் ஆரம்ப பணிகள் மற்றும் அத்திட்டத்தினை விரைவுபடுத்துவதற்காக பிரதேச சபைத் தலைவர் க.தர்சனின் அழைப்பின் பேரில் அமைச்சர் மனோ கணேசன் இன்று காலை சுன்னாகம் சந்தைக்கு வருகை தந்தார். அவர் சந்தையின் கட்டமைப்பு தொடர்பாக வியாபாரிகள் மற்றும் பொதுமக்களோடு கலந்துரையாடினர்.
இதன்போது சுன்னாகம் சந்தையினுடைய பெருமையினை வெளிப்படுத்துகின்ற பாரம்பரிய கட்டடத்தில் மாற்றம் ஏற்படாத வகையில் நவீன சந்தைத் தொகுதி அமைக்கப்பட வேண்டும் என முன்னாள் மாகாண சபை உறுப்பினர் பா. கஜதீபனால் சுட்டிக்காட்டப்பட்டது. இதனை பெருநகர அபிவிருத்தி அமைச்சரின் கவனத்திற்கு கொண்டு வருவதாகவும், புதிய சந்தையினை அமைக்கும் பணி விரைவுபடுத்தப்படும் எனவும் தெரிவித்தார்.

Post a Comment